Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பெண்களின் மார்பிலும்,தோளிலும் கோலம் எழுதும் சந்தனக்குழம்பு,

2. பெண்களின் மார்பிலும்,தோளிலும் சந்தனக்குழம்பினால் எழுதும் கோலம் 

3. ஒரு நீர்க்கொடி,

சொல் பொருள் விளக்கம்

பெண்களின் மார்பிலும்,தோளிலும் கோலம் எழுதும் சந்தனக்குழம்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Solution of sandal for drawing figures on the breast and shoulders of women

figures drawn on the breast and shoulders of women with a sandal solution

a water spinach

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை – மது 416

தொய்யிலால் பொறிக்கப்பட்ட சுணங்கு தோன்றின இளைய முலைகளையும்

தொய்யில் இள முலை இனிய தைவந்து – கலி 54/12

தொய்யில் வரைந்த என் இளமையான முலைகளை இனிதாகத் தடவிக்கொடுத்து

துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர – மது 283

தெளிந்த நீரையுடைய நெகிழ்ந்த பள்ளத்தில் தொய்யில் கொடியோடே மலர

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *