Skip to content

சொல் பொருள்

(வி) 1. அகழ், குழி பறி,  2. குடைந்தெடு,  3. பாரத்தை இறக்கு

சொல் பொருள் விளக்கம்

அகழ், குழி பறி, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dig, excavate, scoop out, to unload, as a ship

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல் – நற் 240/8

பசுக்களை நடத்திச்செல்பவர்கள் பறித்த குழிவான பள்ளத்தின் நீரை

ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர் – கலி 106/26

காளைகள், தம்முடைய அலங்கரிக்கப்பட்ட கொம்புகளால் குத்திக்குடைந்தெடுத்த கொத்தான குடல்களை

மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது
புகாஅர் புகுந்த பெரும் கலம் – புறம் 30/12,13

மேலே இருக்கும் பாயை மடக்காமல், மேல் பாரத்தையும் இறக்காமல்
ஆற்றுமுகத்தில் புகுந்த பெரிய மரக்கலத்தை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *