சொல் பொருள்
(வி) 1. எட்டு, கிட்டு, 2. நனை, 3. பொருந்து, படிந்திரு, 4. செறிந்திரு, 5. அணை, 6. ஆடையை வெளு, 7. நனை, ஈரமாகு, 8. மூழ்கு,
சொல் பொருள் விளக்கம்
எட்டு, கிட்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
reach, approach, dip, soak, come in contact with, be dense, embrace, unite, wash, cleanse the cloth, become wet, be soaked, get immersed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ – பெரும் 333 வானத்தை எட்டுகின்ற மாடத்திகண், நூலால் வரிதலையுடைய பந்தையடித்து இளைத்து, இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த தோய் மடல் சில் நீர் போல – நற் 133/9,10 இரும்புவேலை செய்கின்ற கொல்லனின் வெப்பமான உலையில் தெளித்த பனைமடலில் தோய்த்த சிறிதளவு நீரைப் போல படு நீர் சிலம்பில் கலித்த வாழை கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம் மெல் விரல் மோசை போல காந்தள் வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப – நற் 188/1-5 நீர் வளமுடைய மலைச்சரிவில் செழித்து வளர்ந்த வாழையின் வளைந்த மடல்கள் ஈன்ற கூரிய வாயையுடைய குவிந்த மொட்டு ஒளிரும் இழையணிந்த மகளிரின் ஒளிவிடும் வளையல்களைத் தொடுகின்ற மெல்லிய விரல்களிலுள்ள மோதிரம் போல, காந்தளின் வளமையான இதழ்களில் படிந்திருக்கும், வானத்தை எட்டும் மலைநாட்டினனே சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் – நற் 191/1 சிறிய பூக்களைக் கொண்ட ஞாழலின் தேன் செறிந்திருந்த ஒளிரும் பூங்கொத்துக்கள் துறைவன் மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே – நற் 199/10,11 தலைவனின் உடம்பை அணைத்து முயங்கும் முயக்கத்தைப் பெறாதபோது வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு – நற் 90/3,4 வறுமை இல்லாத சலவைப்பெண், பகலில் வெளுத்த சோற்றின் பழுப்புநிறக் கஞ்சி இட்ட சிறிய பூக்களைக் கொண்ட ஆடையுடன் பெரும் கடல் பரப்பின் இரும் புறம் தோய சிறு_வெண்_காக்கை பல உடன் ஆடும் – நற் 231/3,4 பெரிய கடற் பரப்பில் தமது அகன்ற முதுகு நனையுமாறு சிறிய வெண்ணிறக் கடற்காக்கைகள் பலவும் சேர்ந்து நீராடும் தெளிந்த கழியில் வள் வாய் ஆழி உள் வாய் தோயினும் புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலி_மா – நற் 78/7-9 தெளிந்த கழியில் பெரிதாக அமையப்பெற்ற சக்கரப் பட்டையின் மேல் விளிம்பு அமுங்கப்பெறினும் பறவைகள் எழுந்து பறந்தாற்போன்ற பொன்னால் செய்யப்பட்ட கலன்களைக் கொண்ட செருக்குள்ள குதிரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்