தோரை என்பது ஒரு வகை நெல்
1. சொல் பொருள்
(பெ) ஒருவகை மலைநெல், மூங்கிலரிசி, மூங்கில்நெல் ; கைவரை ; இரத்தம், உதிரம் ; மங்கல்நிறம் ; ஒருபனை வகை, செங்காய்கொண்ட பனை வகை ; மயில்விசிறி ; நான்கு விரற்கிடையுள்ள நீட்டலளவை ; அணிவிடம்
2. சொல் பொருள் விளக்கம்
ஒரு வகை மலை நெல்லைத் ‘தோரை’ என்றனர். மதுரைக்காஞ்சியில் ‘வித்திய குறுங்கதிர் தோரை’ என்ற வரிகளில் மேட்டு நிலத்தில் குறுகிய கதிர்களையுடைய ‘தோரை’ என்னும் நெல் விளைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
A kind of paddy raised in hilly tracts, A palmyra tree producing reddish fruit, Blood, A standard linear measure, of four fingers’ breadth, Bamboo seed, Lines on the palm and the fingers of the hand, Bunch of peacock’s feathers, used as a fan, Strings of jewels, a garland of jewels, Pale reddish colour
Oryza sativa
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
புயல் புனிறு போகிய பூ மலி புறவின் அவல் பதம் கொண்டன அம் பொதி தோரை தொய்யாது வித்திய துளர் படு துடவை - மலை 120-122 மழையால் கசடுகள் நீக்கப்பட்ட, பூக்கள் நிறைந்த காட்டுநிலத்தில், 120 அவல் இடிக்கும் பக்குவம் பெற்றன, அழகிய கொத்துக்கொத்தான மலைநெல் குறும் கதிர் தோரை நெடும் கால் ஐயவி - மது 287 அலங்கல் தாது அவிழ்ந்து சோர அல்குல் பொன் தோரை மின்ன - சிந்தா:10 2132/1 தோரை மலர் நீர் அறுகு துளும்பும் மணி தாலம் - சிந்தா:12 2489/1 நெல்லும் நீர் விளை கேழலும் தோரையும் அல்ல தீம் பழம் காய் கிழங்கு ஆதியா - சிந்தா:6 1422/2,3 சூழ் விளை ஏனலும் பரியும் தோரையும் கூழ் விளை குலுத்தமும் இறுங்கும் கோத்து இரு - தேம்பா:18 3/1,2 பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கி போர் வேடர் கோமானை போற்றி நின்றாள் - 3.இலை:3 48/4 தணி பொன் தோரை தகை ஒளி சுடர - உஞ்ஞை:34/205 தோரையும் துவரையும் ஆயவும் பிறவும் - உஞ்ஞை:49/108
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்