சொல் பொருள்
1. (வி) தோல்வியடை,
2. (பெ) 1. சருமம், 2. விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட கேடயம், 3. தோலினால் செய்யப்பட்ட பை, 4. தோலினால் செய்யப்பட்ட சேணம், 5. யானை, 6. மரப்பட்டை, 7. கொல்லனின் துருத்தி, 8. பழம், விதை ஆகியவற்றின் மேல் தோடு,
சொல் பொருள் விளக்கம்
தோல்வியடை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be defeated, skin, leather shield, leather bag, saddle, elephant, bark of a tree, bellows of the ironsmith, peel of fruits or husk of seeds
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தோலா காதலர் துறந்து நம் அருளார் – நற் 339/1 எக்காலத்தும் தோல்வியையே அறியாத நம் காதலர் நம்மைத் துறந்து இரக்கமில்லாதவராயினார்; இரும் பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு – மது 634 கரிய பிடியின்கண் மேவின தோலை ஒத்த கருமையுடைய இருளைச் சேர்ந்து, புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு – மலை 88 சிறந்த கேடகங்களைக்கொண்ட கோட்டைமதிலில் இருக்கும் வேல் படையின் பாதுகாப்பில் இருக்கும் அறிஞர்க்கு பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல் – பெரும் 283 (வாடூனன்றி)பச்சை இறைச்சியை வைத்த, தோளில் மாட்டிய, பதப்படுத்தாத தோலினால் செய்த பையையுடைய தோல் துமிபு வை நுனை பகழி மூழ்கலின் செவி சாய்த்து – பட் 72,73 சேணங்களை அறுத்துக் கூரிய முனைகளையுடைய அம்புகள் (வந்து)அழுத்துகையினால் செவி சாய்த்துப் புரை தவ உயரிய மழை மருள் பல் தோல் – மலை 377 சிறப்புக்களில் மிக உயர்ந்த, மேகக்கூட்டங்களோ என்று நினைக்கத்தோன்றும் பல யானைகள் கான யானை தோல் நயந்து உண்ட பொரி தாள் ஓமை வளி பொரு நெடும் சினை – குறு 79/1,2 காட்டு யானை பட்டையை விரும்பி உண்ட பொரிந்த அடிமரத்தையுடைய ஓமையின் காற்றால் புடைக்கப்பட்ட நீண்ட கிளையின் உலை வாங்கு மிதி தோல் போல தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே – குறு 172/6,7 உலையில் மாட்டிய துருத்தியைப் போல எல்லை அறியாமல் வருந்தும் என் நெஞ்சே! மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள் – புறம் 321/2 மேலுள்ள தோல்நீக்கப்பட்ட இனிமை பொருந்திய வெள்ளிய எள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்