சொல் பொருள்
(பெ) 1. சிரிப்பு, புன்னகை, 2. ஒளி, பொலிவு, 3. மகிழ்ச்சி, 4. மலர்ந்த பூ, 5. பரிகாசம், 6. விளையாட்டு, 7. முத்துவடம்,
சொல் பொருள் விளக்கம்
சிரிப்பு, புன்னகை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
laughter, smile, brightness, splendour, cheerfulness, blossomed flower, pleasantry, play, garland of pearls
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நகை ஆகின்றே தோழி ————- —————– ——————— பெரும் கடல் சேர்ப்பன் தொழுது நின்றதுவே – நற் 245/1- 12 சிரிப்பைத் தருகின்றது தோழி! ————— ————————– ——————————— பெரிய கடல்பகுதியைச் சேர்ந்தவன் நம்மைத் கைகூப்பித் தொழுது நின்ற காட்சி இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் – பொரு 85 இழைகளை அணிந்த இனிய புன்னகையினையுடைய மகளிர் நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி – முல் 78 பொலிவு தங்கும் வஞ்சிமாலைக்கு நல்ல வெற்றியை நிலைபெறுத்தி குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே – திரு 101,102 குறவரின் இளமகளாகிய, கொடி போன்ற இடையையும் மடப்பத்தையும் உடைய, வள்ளியோடே மகிழ்ச்சியைப் பொருந்திற்று எரி நகை இடை இடுபு இழைத்த நறும் தார் – பரி 13/60 நெருப்பினைப் போன்று மலர்ந்த வெட்சிப்பூவை இடையிட்டுத் தொடுத்த நறிய மாலையில் நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள் – கலி 10/14,15 மிகவும் அதிமான மெல்லியல்பு கொண்டவளான இவள், விருப்பத்துடன் நீ விளையாட்டாகப் பொய்க்கோபம் கொண்டு மறைந்திருந்தாலும், அந்தச் சிறு பிரிவிற்கே அஞ்சி நடுங்குகின்றவளாயிற்றே அம்ம நாணுதும் நும்மொடு நகையே – நற் 172/6 வெட்கமாயிருக்கிறது உம்மோடு இங்கு சிரித்துவிளையாட! பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன் நலம் பெறு கமழ் சென்னி நகையொடு துயல்வர – கலி 81/3,4 பொன்னால் செய்த பிறையிலிருந்து தொங்கும் சிறந்த வேலைப்பாடு அமைந்த உருண்டையான தலைச்சுட்டி அழகு ததும்ப மணங்கமழும் தலையில் முத்துவடத்துடன் அசைந்தாட,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்