Skip to content
வள்ளி

வள்ளி என்பது சர்க்கரை வள்ளிக் கிழங்கு

1. சொல் பொருள்

(பெ) 1. கொடிவகை, அதன் பூ, கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வற்றாளை, வத்தாளை, சீனிக் கிழங்கு  2. கைவளை, 3. முருகனின் மனைவி, 4. குறிஞ்சி மகளிர் கூத்துவகை,

2. சொல் பொருள் விளக்கம்

தமிழ் நாட்டில் நாம் அரிசியை பிரதானமாக காெண்டுள்ளோம். அதே பாேல் அமெரிக்காவில் சர்க்கரை வள்ளிக் கிழங்கை பிரதானமாக காெண்டுள்ளார்கள்.

மொழிபெயர்ப்புகள்

Brazilian arrowroot, sweet potato • Assamese: মিঠা আলু mitha alu • Bengali: মৌআলু mau alu, মিষ্টি আলু mishti alu, রাঙাআলু rana alu, রাঙ্গা আলু ranga alu • Dogri: शकरकंदी shakarkandi • Gujarati: રક્તાળુ raktalu, રતાળુ ratalu, શક્કરીયાં shakkariyam • Hindi: मीठा आलू mitha alu, शकरकन्द shakarkand • Kannada: ಗೆಣಸು ಗಡ್ಡೆ genasu gadde, ಸೀಗೆಣಸು seegenasu, ಸಿಹಿ ಗೆಣಸು sihi genasu • Konkani: ಚಿನಿಕಣಂಗ chinikananga, कणंग kananga • Malayalam: ചക്കരക്കിഴങ്ങ് cakkarakkilangu, ചീനക്കിഴങ്ങു chinakkilangu, മധുരക്കിഴങ്ങ് madhurakkilangu, മരക്കിഴങ്ങു marakkilangu, വള്ളിക്കിഴങ്ങു vallikkilangu • Manipuri: mangra • Marathi: रताळे ratale

Mizo: bahra thlum, kâwl ba-hra • Nepali: चाकुहि chakuhi, कन्दमूल kandamula, सख्खर खण्ड sakkhar khand • Odia: କନ୍ଦମୂଳ kandamula, କିରି kiri, କିଟି kiti, ଶକର କନ୍ଦ shakara kanda • Punjabi: ਸ਼ਕਰਕੰਦੀ shakarkandi • Sanskrit: किरि kiri, किटि kiti, किटिमूलाभ kitimulabha, सूकरी sukari, वराही varahi, वृद्धिद vrddhida • Santali: sakarkenda • Sindhi: گجر لاهوريِ gajar lahorei • Tamil: சர்க்கரைவள்ளி carkkarai valli, சீனிக்கிழங்கு cini-k-kilanku, வற்றாளை varralai • Tangkhul: meiteipai • Telugu: చిలగడదుంప chilagadadumpa, గెణుసు గడ్డ genasu gadda, కంద గడ్డ kanda gadda, మోహనము mohanamu, తెల్ల దుంప thella dumpa • Tulu: ಕೆರೆಂಗ್ kerengu • Urdu: شکر کند shakar kand

சர்க்கரை வள்ளிக் கிழங்கு
சர்க்கரை வள்ளிக் கிழங்கு

3. ஆங்கிலம்

a creeper, Ipomoea batatas, sweet potato, batata, camote, Convolvulus batatas, Armlet, bracelet, wristlet, A wife of Lord Murugan, A kind of dance of hill women

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வாடா வள்ளி வயவர் ஏத்திய - பொருள். புறத்:5/6

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற - பொருள். புறத்:33/1

வண்டே இழையே வள்ளி பூவே - பொருள். கள:4/1

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று – குறள் – 1304

ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய்யாமல் கைவிடுதல், முன்பே நீரில்லாது வாடிப் போன வள்ளிக் கொடியின் வேரை அறுப்பது போன்றது ஆகும் – புலியூர்க் கேசிகன்

வள்ளி
வள்ளி
முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய – முல் 101

முதிர்ந்த காயையுடைய வள்ளியங்காடு பின்னாக மறைய

மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன் – ஐங் 250/3

விரிந்த வள்ளிக்கொடிகள் நிறைந்த கானத்துக்கு உரியன்
– வள்ளியங்கானம்- வள்ளிக்கொடிகள் காடு போல் படர்ந்துள்ளமை பற்றி இவ்வாறு கூறப்பட்டது.- ஔவை.சு.து.உரை

வாழை வள்ளி நீள் நறு நெய்தல் – குறி 79

வாழைப்பூ, வள்ளிப்பூ, நீண்ட நறிய நெய்தற்பூ

பூண்டதை சுருள் உடை வள்ளி இடை இடுபு இழைத்த
உருள் இணர் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார் – பரி 21/10,11

நீ அணிந்துகொண்டது, சுருளும் தன்மையுடைய வள்ளிப்பூவை இடையிடையே இட்டுத் தொடுத்த
தேருருள் போன்ற பூங்கொத்துக்களையுடைய கடம்பின் பூவுடன் சேர்ந்து கமழ்கின்ற மாலை;

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே
மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே – புறம் 109/3-8

உழவரால் உழுது விளைக்கப்படாதன நான்கு விளையுளை உடைத்து,
ஒன்று, சிறிய இலையையுடைய மூங்கிலினது நெல் விளையும்,
இரண்டு, இனிய சுளையையுடைய பலாவினது பழம் ஊழ்க்கும்,
மூன்று, கொழுவிய கொடியையுடைய வள்ளிக்கிழங்கு தாழ இருக்கும்
நான்கு, அழகிய நிறத்தையுடைய ஓரி பாய்தலால், அதன் மேற்பவர் அழிந்து
கனத்த நெடிய மலை தேனைப்பொழியும்.

(Convolvulus batatas என்ற வள்ளிக்கொடி வகைகளுக்குக் கிழங்குதான் உண்டு. ஆனால், முல்லைப் பாட்டு அதற்குக்
காய் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. இது ஆய்வுக்குரியது. ஆனால் Dioscorea pentaphylla என்ற ஒரு வகை
வள்ளிக்கொடியில் காய்கள் காய்த்திருப்பதைக் காணலாம்)

வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் – நெடு 36

வெண்சங்கு வளையல்கள் இறுகின இறையினை உடைய மூங்கில்(போன்ற) தோளினையும்

ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் – புறம் 352/5

ஆம்பலின் தண்டால் செய்யப்பட்ட வளை அணிந்த கையையுடைய மகளிர்

குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்
வித்தக தும்பை விளைத்தலான் வென் வேலாற்கு
ஒத்தன்று தண் பரங்குன்று – பரி 9/67-69

குறிஞ்சி நிலத்துக் குறவரின் வீரம் பொருந்திய மகளாகிய வள்ளியின் தோழிமார்
திறமையோடு போரிட்டு வெற்றியை விளைத்ததால் வெற்றியையுடைய வேலவனுக்குப்
பெரிதும் பொருந்துவதாயிற்று தண்ணிய பரங்குன்றம்;

முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின் – நற் 82/4

முருகவேளைக் கலந்து உடன்சென்ற வள்ளி நாச்சியாரைப் போல

வாடா வள்ளியின் வளம் பல தரூஉம்
நாடு பல கழிந்த பின்றை – பெரும் 370,371

வாடாத வள்ளியாகிய வள்ளிக் கூத்தினைக் கொண்ட, வளங்கள் பலவற்றையும் தருகின்ற
நாடுகள் பலவற்றையும் கடந்த பின்பு
வற்றாளை
வற்றாளை
முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய - முல் 101

வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் - நெடு 36

மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே - திரு 102

வாழை வள்ளி நீள் நறு நெய்தல் - குறி 79

முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின் - நற் 82/4

வாடா வள்ளி அம் காடு இறந்தோரே - குறு 216/2

மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன் - ஐங் 250/3

குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் - பரி 9/67

நறு மலர் வள்ளி பூ நயந்தோயே - பரி 14/22

பூண்டதை சுருள் உடை வள்ளி இடை இடுபு இழைத்த - பரி 21/10

வள்ளி கீழ் வீழா வரை மிசை தேன் தொடா - கலி 39/13

வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல் - அகம் 52/1

வள்ளி நுண் இடை வயின்_வயின் நுடங்க - அகம் 286/2

ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் - புறம் 63/12

மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே - புறம் 109/6

வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய - புறம் 316/9

ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் - புறம் 352/5

வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் - பெரும் 370

பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார் - நற் 269/7

முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்/புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் - நற் 295/1,2

வள்ளியை என்றலின் காண்கு வந்திசினே - பதி 54/1

வள்ளியை ஆக என நெஞ்சை வலி-உறீஇ - கலி 142/30

வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் என - புறம் 211/8

மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே - திரு 102

பிரிந்தவர் மேனி போல் புல்லென்ற வள்ளி
பொருந்தினர் மேனி போல் பொற்ப திருந்திழாய் - ஐந்50:8/1,2

வள்ளியின் ஆடும் மலை நாட அஃது அன்றோ - பழ:140/3

வள்ளி உருவம் தீ முன் வல்லையே உருகும் வண்ணத்து - தேம்பா:28 139/1

குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
   நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன் - சிந்தா:2 482/1,2

வள்ளி இன் அமுதும் வரை வாழையின் - சிந்தா:6 1424/1

வள்ளி வாரிய குழியின் வளர் பொன்னும் வயிரமும் இமைக்கும் - சிந்தா:7 1565/1

வள்ளி வென்ற நுண் இடை மழை மலர் தடம் கணார் - சிந்தா:9 2039/2

வயிர் மயிர் கிடுகொடு வள்ளி தண்டையும் - சிந்தா:10 2218/2

வள்ளி முலை தோய் குமரன் தாதை வான் தோயும் - தேவா-சம்:2151/1

வள்ளி மருங்குல் நெருங்கும் முலை செவ்வாய் - தேவா-சம்:4153/3

வள்ளி வளை தோள் முதல்வன்-தன்னை வாரா உலகு அருள வல்லான்-தன்னை - தேவா-அப்:2108/3

வள்ளிமணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே - தேவா-அப்:2320/4

வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வன முலையே - திருக்கோ:128/4

வள்ளி உள் நாவில் அடக்கி வைத்தாரே - திருமந்:834/4

வள்ளி நுடங்கு இடை மாதர் வந்து அலர் தூற்றிட - நாலாயி:240/1

பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல் - நாலாயி:1112/3

வள்ளி மருங்குல் என்தன் மட மானினை போத என்று - நாலாயி:1208/2

வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக்கணான் - நாலாயி:1513/1

முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி முத்தன் என்ன உள்ளம் உணராதே - திருப்:476/3

அன்னை வலி சேர் தன கோடு இரண்டு ஆன வள்ளி மணவாளா - திருப்:478/12

தெள்ளும் ஏனல் சூழ் புனம் மேவிய வள்ளி வேளைக்கார மனோகர - திருப்:483/15

வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே - திருப்:530/8

வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே - திருப்:530/8

வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே - திருப்:530/8

வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே - திருப்:531/8

வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே - திருப்:531/8

வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே - திருப்:531/8

வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே - திருப்:532/8

வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே - திருப்:532/8

வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே - திருப்:533/8

வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே - திருப்:533/8

வள்ளி சன்மார்க்கம் விள் ஐக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே - திருப்:534/7

வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே - திருப்:534/8

வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே - திருப்:534/8

வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே - திருப்:535/8

வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே - திருப்:535/8

வகுளமும் முகுளித வழைகளும் மலி புன வள்ளி குலா திகிரி வாழும் - திருப்:536/7

வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே - திருப்:537/8

வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே - திருப்:537/8

வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி மலை காத்த நல்ல மணவாளா - திருப்:538/6

வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி மலை காத்த நல்ல மணவாளா - திருப்:538/6

கொல்லை மிசை வாழ்கின்ற வள்ளி புனமே சென்று கொள்ளை கொளும் மாரன் கை அலராலே - திருப்:607/7

மரகத வடிவும் மடலிடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா - திருப்:656/6

தரு புன வள்ளி மலை மற வள்ளி தரு தினை மெள்ள நுகர்வோனே - திருப்:658/6

தரு புன வள்ளி மலை மற வள்ளி தரு தினை மெள்ள நுகர்வோனே - திருப்:658/6

மரு அலர் வள்ளிபுரம் உள்ள வள்ளி மலை மற வள்ளி மணவாளா - திருப்:659/5

மரு அலர் வள்ளிபுரம் உள்ள வள்ளி மலை மற வள்ளி மணவாளா - திருப்:659/5

வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே - திருப்:660/5

தெய்வ வள்ளி மையல் கொள்ளு செல்வ பிள்ளை முருகோனே - திருப்:661/6

மை உலவு சோலை செய்ய குளிர் சாரல் வள்ளி மலை வாழும் கொடி கோவே - திருப்:662/6

வையம் முழுது ஆளும் ஐய குமரேச வள்ளி படர் கானம் புடை சூழும் - திருப்:663/5

வள்ளி மலை வாழும் வள்ளி மணவாளா மை உததி ஏழும் கனல் மூள - திருப்:663/6

வள்ளி மலை வாழும் வள்ளி மணவாளா மை உததி ஏழும் கனல் மூள - திருப்:663/6

வதன சரோருக நயன சிலீ முக வள்ளி புனத்தில் நின்று வாராய் பதி காதம் காதரை ஒன்றும் ஊரும் - திருப்:664/1

இங்கீத வேத பிரமாவை விழ மோதி ஒரு பெண் காதலோடு வனம் மேவி வள்ளி நாயகியை - திருப்:813/13

துள்ளும் மால் நித்த முனி புள்ளி மான் வெற்பு உதவு வள்ளி மானுக்கு மயல் மொழிவோனே - திருப்:1232/5

வள்ளல் தொழு ஞான கழலோனே வள்ளி மணவாள பெருமாளே - திருப்:1291/4

வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே - திருப்:532/8

வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே - திருப்:533/8

வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே - திருப்:534/8

வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே - திருப்:535/8

வனசரர் மரபினில் வரும் ஒரு மரகத வள்ளிக்கு வாய்த்த பெருமாளே - திருப்:536/8

வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே - திருப்:537/8

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே - திருப்:1328/6

வட்டணம் தட்டி நீள் வள்ளி தண்டை தோல் - சீறா:3005/1

வெம் திறல் வீமனும் விழைந்து வள்ளியும்
கந்தனும் என பெரும் காதல் கூரவே - வில்லி:4 26/3,4

பிதிர்ந்த முள்ளி சிதைந்த வள்ளி பிளந்த கள்ளி பரந்தவே - கலிங்:77/2

வள்ளி மருங்கின் வயங்கு_இழை தழீஇ - உஞ்ஞை:47/119

பள்ளி கொண்ட வள்ளி அம் சாயல் - உஞ்ஞை:53/119

வள்ளி கைவினை வனப்பு அமை கட்டிலும் - உஞ்ஞை:57/53

வள்ளி போர்வையும் வகைவகை அமைத்து - உஞ்ஞை:57/62

வள்ளி மருங்கில் வாசவதத்தையை - இலாவாண:13/76

வள்ளி அம் பணை தோள் முள் எயிற்று அமர் நகை - இலாவாண:14/56

வெள்ளை சாந்தின் வள்ளி எழுதிய - மகத:8/61

வள்ளி மருங்கின் ஒள் இழை ஏழையை - நரவாண:8/54

வேனில் வள்ளியின் மேனி வாடி - உஞ்ஞை:55/12

அருவி வள்ளியின் அணி பெறு மருங்குலள் - வத்தவ:7/215

அரி சாலேகமும் ஆர வள்ளியும்
கதிர் சாலேகமும் கந்தும் கதிர்ப்ப - உஞ்ஞை:40/9,10

வள்ளியும் வகுந்தும் சுள்ளியும் சூரலும் - உஞ்ஞை:46/276

சுள்ளியும் சூரலும் வள்ளியும் மரலும் - உஞ்ஞை:50/27

வள்ளியும் மரலும் தன் வழி வணக்கி - உஞ்ஞை:51/54

வள்ளியும் மலரும் கொள்வழி கொளீஇ - இலாவாண:4/84

வள்ளியும் பத்தியும் உள் விரித்து எழுதி - இலாவாண:6/73

முத்த வள்ளியொடு மு_மணி சுடர - உஞ்ஞை:34/203

மலை வேங்கை நறு நிழலின் வள்ளி போல்வீர் மனம் நடுங்க - வஞ்சி:24/3

வள்ளி கொள்பவர் கொள்வன மா மணி - பால:2 33/1

வள்ளி நுண் இடை மா மலராளொடும் - அயோ:7 19/2

வள்ளி புடை சுற்றி உயர் சிற்றலை மரம்-தோறு - கிட்:10 81/1

வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம் - சுந்:2 36/1

வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது - யுத்3:29 57/3

வள்ளியும் மரங்களும் மலையும் மண் உற - கிட்:16 26/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *