Skip to content

பரங்குன்றம் என்பது திருப்பரங்குன்றம்

1. சொல் பொருள்

(பெ) திருப்பரங்குன்றம்,

2. சொல் பொருள் விளக்கம்

திருப்பரங்குன்றம்,

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

thirupparangkundram, a small city near Madurai

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை – அகம் 59/11,12

சினம் மிகு முருகனது குளிர்ந்த திருப்பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்தன மரங்கள் மிக்க உயர்ந்த மலை

தண் பரங்குன்றத்து அடி தொட்டேன் என்பாய் - பரி 8/62
தண் பரங்குன்றத்து இயல் அணி நின் மருங்கு - பரி 19/5
சோபன நிலை அது துணி பரங்குன்றத்து/மாஅல் மருகன் மாட மருங்கு - பரி  19/56,57
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து/அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை - அகம் 59/11,12

தண் பரங்குன்றம் நினக்கு - பரி 8/130
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம்/குன்றத்து அடியுறை இயைக என பரவுதும் - பரி  21/15,16
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம்/வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார் மற்றையார் - பரி  34/2,3

தளி மழை பொழியும் தண் பரங்குன்றில்/கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம் - மது 263,264

அம் வெள் அருவி அணி பரங்குன்றிற்கும்/தொய்யா விழு சீர் வளம் கெழு வையைக்கும் - பரி  17/43,44

கூடலொடு பரங்குன்றின் இடை - பரி 17/23
அனைய பரங்குன்றின் அணி - பரி 17/39

தலை தொட்டேன் தண் பரங்குன்று/சினவல் நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்கு - பரி  6/95,96
பரங்குன்று இமய குன்றம் நிகர்க்கும் - பரி 8/11
சிறப்பிற்றே தண் பரங்குன்று/இனி மன்னும் ஏதிலர் நாறுதி ஆண்டு - பரி  8/46,47
தாள் தொழு தண் பரங்குன்று/தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் - பரி  8/82,83
தணி மழை தலையின்று தண் பரங்குன்று/நான்மறை விரித்து நல் இசை விளக்கும் - பரி  9/11,12
ஒத்தன்று தண் பரங்குன்று/கடும் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் - பரி  9/69,70
தழுவும் தகை வகைத்து தண் பரங்குன்று/வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய - பரி  21/45,46

தொலைவில் சண்முகங்களும் தந்திர மந்த்ரங்களும் பழநி மலையும் பரங்குன்றமும் செந்திலும் - திருப்:922/11

பங்கு அம்பலவன் பரங்குன்றில் குன்று அன்ன மா பதைப்ப - திருக்கோ:100/3
பற்று ஒன்று இலார் பற்றும் தில்லை பரன் பரங்குன்றில் நின்ற - திருக்கோ:178/1
பரிந்து எனை ஆண்ட சிற்றம்பலத்தான் பரங்குன்றில் துன்றி - திருக்கோ:279/3

பரிவு செய்து ஆண்டு அம்பலத்து பயில்வோன் பரங்குன்றின்-வாய்
  அருவி செய் தாழ் புனத்து ஐவனம் கொய்யவும் இ வனத்தே - திருக்கோ:144/1,2

பதி உடையான் பரங்குன்றினில் பாய் புனல் யாம் ஒழுக - திருக்கோ:292/2

குளிர் பூம் சாரல் வண்டு அறை சோலை பரங்குன்றம்
  தளிர் போல் மேனி தையல் நல்லாளோடு ஒரு பாகம் - தேவா-சம்:1083/2,3
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே - தேவா-சம்:1885/3
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் - தேவா-அப்:2247/3
படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே - தேவா-சுந்:21/3

பாதி ஒரு பெண் முடி மேல் கங்கையானை பாசூரும் பரங்குன்றும் மேயான்-தன்னை - தேவா-அப்:2417/1

பாடலன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே - தேவா-சம்:1080/4
பங்கினன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே - தேவா-சம்:1081/4
பாரிடம் பாட இனிது உறை கோயில் பரங்குன்றே - தேவா-சம்:1082/4
படை நவில்வான்-தன் நன் நகர் போலும் பரங்குன்றே - தேவா-சம்:1085/4
பயில் பெடை வண்டு பாடல் அறாத பரங்குன்றே - தேவா-சம்:1086/4
பந்து இயல் அங்கை மங்கை ஒர்பங்கன் பரங்குன்றே - தேவா-சம்:1088/4

பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
  உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே - தேவா-சம்:1084/3,4
பத்தின திண் தோள் இருபதும் செற்றான் பரங்குன்றை
  சித்தம் அது ஒன்றி செய் கழல் உன்னி சிவன் என்று - தேவா-சம்:1087/2,3
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றை
  தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே - தேவா-சம்:1089/3,4
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான்-தன் பரங்குன்றை
  தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி - தேவா-சம்:1090/2,3

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *