சொல் பொருள்
(பெ) 1. உணர்வு நிலை, உண்மை, 2. ஆடுகளம், கூத்து நடைபெறுமிடம்,
சொல் பொருள் விளக்கம்
உணர்வு நிலை, உண்மை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wakefulness, reality
stage for performing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நகை சான்ற கனவு அன்று நனவு அன்று நவின்றதை – பரி 8/77 நகைத்தற்கு இடமான கனா அன்று, உண்மையில் நிகழ்ந்த நிகழ்ச்சியும் அன்று, நீ சொல்வது நனவு புகு விறலியின் தோன்றும் நாடன் – அகம் 82/10 ஆடுகளத்தில் புகுந்து ஆடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டையுடையவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்