சொல் பொருள்
(பெ) 1. தேன், 2. வாசனையுள்ள கொடி, 3. நறுமணம், 4. நறும்புகை,
சொல் பொருள் விளக்கம்
தேன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
honey, a fragrant creeper, fragrance, incense
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேனில் பாதிரி கூனி மா மலர் நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம் – அகம் 257/1,2 வேனில்காலத்தின் பாதிரியின் வளைவையுடைய சிறந்த பூக்களின் தேன் பொருந்திய வாடல் மணக்கின்ற பகற்பொழுதில் சுரத்தின்கண் நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி – புறம் 168/15 நறைக்கொடியின் நாரால் தொடுக்கப்பட்ட வேங்கைப்பூ மாலையினையும் நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை – குறு 339/1 வாசனையையுடைய அகிலின் வளமையாகச் செறிந்த தினைப்புனத்தில் எழுந்த நறிய புகை நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப – கலி 101/12 நறும்புகையுடன் புழுதியும் கிளம்ப, நல்ல மகளிர் திரண்டு நிற்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்