சொல் பொருள்
1. (வி) நட்புக்கொள்,
2. (பெ.அ) செறிந்த,
சொல் பொருள் விளக்கம்
நட்புக்கொள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
befriend, dense, thick
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நள்ளாதார் மிடல் சாய்த்த வல்லாள – புறம் 125/5,6 உன்னுடன் நட்புக்கொள்ளாதவரது வலிமையைத் தொலைத்த ஆண்மையையுடையோய் பெரும் தோள் கணவன் மாய்ந்தென அரும்பு அற வள் இதழ் அவிழ்ந்த தாமரை நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே – புறம் 246/13-15 பெரிய தோலையுடைய கணவன் இறந்துபட்டானாக, முகை இல்லாத வளவிய இதழ் மலர்ந்த தாமரையையுடைய (நீர்) செறிந்த பெரிய பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்