சொல் பொருள்
(பெ) 1. கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் பெயர் கண்டீரக்கோ பெருநள்ளி, 2. நண்டு
சொல் பொருள் விளக்கம்
கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் பெயர் கண்டீரக்கோ பெருநள்ளி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
crab
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திண் தேர் நள்ளி கானத்து அண்டர் பல் ஆ பயந்த நெய்யின் – குறு 210/1,2 திண்ணிய தேரையுடைய நள்ளியின் புஞ்செய்க்காட்டிலுள்ள இடையர்களின் கூட்டமான பசுக்கள் கொடுத்த நெய்யோடு இவனைப்பற்றிய பிற குறிப்புகள்: நளி மலை நாடன் நள்ளியும் – சிறு 107 வல் வில் இளையர் பெருமகன் நள்ளி – அகம் 152/15,16 கழல் தொடி தட கை கலி_மான் நள்ளி – அகம் 238/14,15 கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி – புறம் 148/1 நளி மலை நாடன் நள்ளி அவன் – புறம் 150/28 நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை – பரி 10/85 சங்கு, நண்டு, நடக்கின்ற இறால், வலிய வாளைமீன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்