Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நாணம், மளிர்க்குரிய கூச்சம், 2. மான உணர்வு, 3. வெட்கம் உணர்வு, 4. வில்லை வளைத்துக் கட்டியிருக்கும் கயிறு, 5. தூண்டிலில் கட்டிய கயிறு,  6. நூல்

சொல் பொருள் விளக்கம்

நாணம், மளிர்க்குரிய கூச்சம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Bashfulness, modesty, sense of honour and dignity, sense of shame, bowstring, rope in a fishing rod, string, thread

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் – பொரு 31

நாணம் (தன்னை)அழுத்த (பிறரை நோக்காது)கவிழ்ந்த அழகு மிகுந்த கழுத்தினையும்

ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் – மலை 386,387

(தன்னுடன்)ஒத்துப்போகாத பகைவரின் தோல்வியின்போது ஆரவாரித்ததைப் போன்று,
(வெற்றியாகிய)நல்ல தீர்வைக் கொடுத்த (இறந்துபட்ட)மான உணர்வு உள்ள வீரர்களின்

உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம்
நாண் இலை மன்ற யாணர் ஊர – அகம் 226/1,2

மெய்ம்மையாகக் கொள்ளமாட்டேன், உன் வஞ்சனை பொதிந்த சொற்களைக் கூறாதே
உனக்கு நிச்சயமாக வெட்கம் இல்லை, புதுவருவாயையுடைய ஊரனே

வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்
வடி மணி பலகையொடு நிரைஇ முடி நாண்
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் – பெரும் 119-121

கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை
வார்த்த மணி (கட்டின)பலகைகளோடு வரிசையில் வைத்து, (தலையில்)முடிந்த நாணையுடைய
வில்லைச் சார்த்தி வைத்த அம்புகள் தங்கும் அகன்ற வீடுகளையும்

நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை – பெரும் 285-287

நெடிய மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், கயிற்றிலே கொளுவப்பட்ட
வளைந்த வாயினையுடைய தூண்டில் முள்ளின் மடித்த தலை (இரையின்றித்)தனிக்கும்படியும்,
பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,

கிள்ளை
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் – குறு 67/1–4

கிளியானது
தன் வளைந்த அலகில் கொண்டிருக்கும் வேம்பின் ஒளிவிடும் பழம்
புதிய நூலைக் கோக்கும்பொருட்டு முனை சிறந்த நன்றாக வளர்ந்த நகங்களில் கொண்ட
பொன் அணிகலத்தின் ஒரு காசினைப் போன்றிருக்கும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “நாண்”

  1. மாதவராஜ்

    தமிழ் மாய்ந்து போகாமல் வளர்ந்து கொண்டே இருக்க உங்கள் முயற்சி மிகமிக அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *