Skip to content

நாற்பெருங்குழு

சொல் பொருள்

(பெ) அரசரின் ஆலோசனைக் குழு,

சொல் பொருள் விளக்கம்

அரசரின் ஆலோசனைக் குழு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the four advisory bodies of a king

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தாம் மேஎம் தோன்றிய நாற்பெருங்குழுவும் – மது 510

தாம் தமது ஒழுக்கத்தால் மேலாய் விளங்கிய நால்வகைப்பட்ட பெரிய குழுவினரும்

அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதர், ஒற்றர் என்ற ஐவரைக் கொண்ட குழு ஐம்பேராயம்
எனப்படும். இந்த ஐவரில் அமைச்சரைப் பற்றி ஏற்கனவே கூறிவிட்டதால், அவர் தவிர்த்த
நால்வரையும் இங்கு நாற்பெருங்குழு என்று மாங்குடி மருதனார் குறிப்பிடுகிறார்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *