Skip to content

சொல் பொருள்

(வி.அ) 1. நாள்தோறும், 2. (அந்த)நாள்கூட, 3. நாட்களாக,

சொல் பொருள் விளக்கம்

நாள்தோறும்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

everyday, even that day, for (many) days

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறை-மதி பெரும – மது 780,781

மணம் நாறுகின்ற கள்தெளிவைத் தர அதனைப் பருகி, நாள்தோறும்
மகிழ்ச்சி எய்தி இனிதாக இருப்பாயாக, பெருமானே,

தோளும் அழியும் நாளும் சென்று என
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று
கண்ணும் காட்சி தௌவின – நற் 397/1-3

என் தோள்கள் மெலிவடைந்து தம் நலம் அழிந்தன; குறித்துச் சென்ற நாளும் கடந்துவிட்டதாக,
நீண்ட பாலை நிலத்திடை அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளியிழந்து
கண்களும் பார்வை குன்றிப்போயின

பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்
பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ – கலி 48/16,17

பலநாட்களாக நினைவு வருத்துவதினால் பசலையால் விழுங்கப்பட்டவளின்
பொன் உரைக்கும் கல்லில் உரைக்கப்பட்ட மணியினைப் போன்ற இவளின் மாநிறத்தின் மேல்
தவறு உண்டோ?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *