சொல் பொருள்
(பெ) 1. கொழுப்பு, 2. ஊன், தசை, மாமிசம்,
சொல் பொருள் விளக்கம்
கொழுப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fat, flesh
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி – மலை 244 வெண்ணெய் போன்ற வெண்மையான கொழுப்பு (அம்பு தைத்த இடத்தில்)மிகுதியாய் வெளிவர, நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து அணங்குடை மரபின் இரும் களம்தோறும் – புறம் 392/7,8 தசையும் குருதியும் தோய்ந்த பெருக்கால் உண்டாகிய ஈரம் பொருந்திய, துன்பம் தரும் தெய்வங்கள் உறையும் முறைமையினையுடைய பெரிய போர்க்களந்தோறும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்