Skip to content

சொல் பொருள்

(வி) 1. வரிசையாக அமை, 2. பரவு,

சொல் பொருள் விளக்கம்

வரிசையாக அமை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

arrange in order, spread, expand

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நிரந்து இலங்கு வெண் பல் மடந்தை – குறு 52/4

வரிசையாக அமைந்த மின்னுகின்ற வெள்ளைப் பற்களையும் உடையவளே!

நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து
சூர் நிரந்து சுற்றிய மா தபுத்த வேலோய்
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர்நிரந்து
ஏறுமாறு ஏற்கும் இ குன்று – பரி 18/3-6

நீரைப் பரந்து ஏற்ற நிலம் தாங்குகின்ற கடற்பரப்பில்
கொடுமையுடன் பரந்து சுற்றிய சூரபன்மாவை அழித்த வேலினையுடையவனே! உன்னுடைய
புகழைப் பரந்து பெற்று விளங்கும் இமயமலையுடன் நேர்நின்று
மாறுபடுதலை ஏற்கும் இந்தத் திருப்பரங்குன்றம்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *