சொல் பொருள்
(வி) 1. நிழல்செய்,
2. காத்தளி
3. ஒளிவீசு,
சொல் பொருள் விளக்கம்
1. நிழல்செய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shade
protect
shed radiance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொல் களிற்று மீமிசை கொடி விசும்பு நிழற்றும் எம் கோ வாழிய குடுமி – புறம் 9/7,8 கொல் யானை மேலே ஏற்றிய கொடிகள் ஆகாயத்தை நிழல்செய்யும் எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின் மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை – புறம் 51/1,2 நீர் மிகுமாயின் அதனைத் தாங்கும் அரணும் இல்லை, நெருப்பு மிகுமாயின் உலகத்து நிலைபெற்ற உயிர்களைக் காக்கும் புகலிடமும் இல்லை விசும்பு இழி தோகை சீர் போன்றிசினே பசும்_பொன் அவிர் இழை பைய நிழற்ற கரை சேர் மருதம் ஏறி பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே – ஐங் 74 வானத்திலிருந்து இறங்கும் மயிலின் தோகை அழகைப் போல இருந்தது பைம்பொன்னாலான ஒளிவிடும் அணிகலன்கள் மெல்லென ஒளிவீச, கரையைச் சேர்ந்த மருதமரத்தில் ஏறி, நீருக்குள் பாய்பவளின் குளிர்ந்த நறிய கூந்தல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்