Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நீல நிறம், 2. கருப்பு நிறம், 3. நீலப்பூ, கருங்குவளை, 4 . நீலமணி, 

சொல் பொருள் விளக்கம்

நீல நிறம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Blue colour, black, Blue nelumbo, sapphire

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நிறம் கவர்பு புனைந்த நீல கச்சினர் – மது 639

நிறத்தை வாங்கிப் புனைந்த(தைப் போன்ற) நீலநிறக் கச்சினையும் உடையவராய்;

நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து – ஐங் 91/1

அலையலையாய் வளைந்திருக்கும் கொம்பினையுடைய எருமையின் கரிய பெரிய கடாவானது

அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி – பெரும் 293

சாதிலிங்கம் (போன்ற)இதழையுடைய குவளைப் பூவோடே நீலப்பூவும் வளர்ந்து

நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின் – அகம் 358/1

நீல மணியைப் போன்ற நிறம் விளங்கும் கழுத்தினையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *