சொல் பொருள்
(வி) 1. வளை, மடங்கு, 2. அசை, ஆடு, அலை,
சொல் பொருள் விளக்கம்
வளை, மடங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bend, fold, wave, flutter
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் பாண்டில் விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 173-175 வாடையின் குளிர்ந்த காற்று அடிக்குந்தோறும் நெளிந்து வளைந்து, தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்த தீச்சுடரையுடையவாய், நன்றாகிய பலவான பாண்டில் விளக்கில் பருத்த தீக்கொழுந்து எரிய நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – நற் 45/4 நெடிய கொடிகள் மடங்கி அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழைய ஊரின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்