Skip to content

சொல் பொருள்

(வி) 1. வளை, மடங்கு, 2. அசை, ஆடு, அலை,

சொல் பொருள் விளக்கம்

வளை, மடங்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bend, fold, wave, flutter

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல்
பாண்டில் விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 173-175

வாடையின் குளிர்ந்த காற்று அடிக்குந்தோறும் நெளிந்து வளைந்து,
தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்த தீச்சுடரையுடையவாய், நன்றாகிய பலவான
பாண்டில் விளக்கில் பருத்த தீக்கொழுந்து எரிய

நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – நற் 45/4

நெடிய கொடிகள் மடங்கி அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழைய ஊரின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *