சொல் பொருள்
(பெ) நுண்மை, நுரை
சொல் பொருள் விளக்கம்
நுண்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
minuteness, foam
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி பால கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம் சிலம்பி நூலின் நுணங்குவன பாறி – அகம் 224/5-8 காற்றின் வேகத்தை ஒத்த விரைந்த ஓட்டத்தினையுடைய குதிரைகளின் பால் கடையுங்கால் எழும் நுரையின் பெரிய மிதப்பினை ஒத்த மிக்க வெண்மையான வாயின் தெவிட்டலாய பின்னே வழிந்திடும் மெல்லிய நுரை சிலம்பியின் நூல் போல் நுணுகுவனவாய்ச் சிதறி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்