சொல் பொருள்
(வி) 1. நுண்ணிதாகு, 2. சிறுத்துப்போ, 3. மெல்லியதாகு, 4. நுட்பமாகு, 5. நுட்பமாகு, 6. நுட்பமாகு,
சொல் பொருள் விளக்கம்
நுண்ணிதாகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be subtle, be thin, be fine, sharp, minute, Difficult to detect or grasp by the mind or analyze
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி கடுத்தலும் தணிதலும் இன்றே – குறு 136/1-3 காமம் காமம் என்கிறார்களே; அந்தக் காமம் வருத்தமும் நோயும் அன்று; நுண்ணிதாகி மிகுவதும் குறைவதும் அன்று யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில் – நற் 157/4 ஆற்றில் அரித்தோடும் நீரோட்டம் சிறுத்துப்போன பதமான இளவேனில் காலத்தில் செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின் கண் பொருபு உகூஉம் ஒண் பூ கலிங்கம் – மது 432,433 செவ்வானத்தை ஒத்த, சிவந்து மெல்லிய வடிவில், கண்களை மயக்கி தெறித்துவிழப்பண்ணும் ஒள்ளிய பூவேலைப்பாடமைந்த ஆடைகளை நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர் – மது 646,647 நூற்கள் (கூறும்)வழிமுறையைத் தப்பாத நுட்பமான நுணுகிய ஆராய்ச்சியின்)தெளிவினையுடையவராய்;(உள்ள) ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்; நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை – மலை 35 நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும் நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய இனமழை தவழும் ஏழில்குன்றத்து – அகம் 345/6,7 நுட்பமான, நுண்ணிய செய்யுட்களை இயற்றிய புலவனால் பாடப்பெற்ற கூட்டமான மேகங்கள் தவழும் எழில்குன்றத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்