Skip to content

சொல் பொருள்

அழி, வெட்டு, (மார்பில்)அடித்துக்கொள், நூறு என்னும் எண், நீறு, சுண்ணாம்புப்பொடி

சொல் பொருள் விளக்கம்

அழி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

destroy, kill, cut down, butcher, strike, beat (as one’s breast), hundred, lime powder

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அம்பு உடை கையர் அரண் பல நூறி – அகம் 69/16

அம்பினையுடைய கையினராய் பகைவர் அரண்கள் பலவற்றை அழித்து

வேல் கோல் ஆக ஆள் செல நூறி – மது 690

வேலினை (ஆனோட்டும்)கோலாகக்கொண்டு வீரரை மாள வெட்டி

முலை பொலி ஆகம் உருப்ப நூறி
மெய்ம்மறந்து பட்ட வரையா பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர – புறம் 25/10-12

முலை பொலிந்த மார்பகம் அழல்பட அறைந்துகொண்டு
அறிவு மயங்கி உற்ற அளவற்ற அழுகை ஆரவாரத்தையுடைய
ஒளிரும் நெற்றியையுடைய மகளிர் கைம்மை நோன்பிலே மிக

காய் நெல் அறுத்து கவளம் கொளினே
மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும்
நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் – புறம் 184/1-4

காய்த்த நெல்லை அறுத்துக் கவளமாகக் கொடுத்தால்
ஒரு மாவுக்குக் குறைந்த நிலத்தின் கதிரும் பல நாளைக்கு ஆகும்
நூறு செய் ஆயினும் யானை தனித்துப் புகுந்து உண்ணுமாயின்
அதன் வாயினுள்புகுந்த நெல்லைக் காட்டிலும் கால் மிகவும்கெடுக்கும்.

நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர் – மது 401

நீண்ட கொடி(யில் விளையும்) வெற்றிலையை உடையவரும், சங்கு சுட்டு(ப் பொடித்த) சுண்ணாம்பையுடையவரும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *