Skip to content

சொல் பொருள்

மனம், இருதயம், ஆகமம்

சொல் பொருள் விளக்கம்

மனம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

mind, heart, Agamas

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செம் புல பெயல் நீர் போல
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே – குறு 40/4,5

செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல
அன்புடைய நம் மனங்கள் தாமாக ஒன்றுபட்டனவே

ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு – கலி 103/43

எருமைக்கடாவில் வருகின்ற கூற்றுவனின் இருதயத்தைக் கால்நுனியால் பிளந்திட்டு

சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று
ஐந்து உடன் போற்றி – பதி 21/1,2

சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய
ஐந்தினையும் சேர்ந்து கற்று,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *