சொல் பொருள்
நீண்ட நேரம், நீண்ட காலம், நீண்டதாக,, நெடுநேரம் தாமதமாக, நீளமானது
சொல் பொருள் விளக்கம்
நீண்ட நேரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
long time, long number of years, long, after a long delay, is long
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் – சிறு 179-181 குறிய தாளினையும் உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி, (தான்)நிலையாக இருத்தல் அரிதாகிய குளத்தை(க் கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுதிருந்து புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின் தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி வந்தேன் பெரும வாழிய நெடிது – பெரும் 460,461 குறையாத கொடையினையுடைய நின் பெரிய பெயரைப் புகழ்ந்துசொல்லி, வந்தேன் பெருமானே, நீ நெடுங்காலம் வாழ்வாயாக’ உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா – நெடு 163 உரோகிணியை நினைத்தவளாய்(அவற்றைப்) பார்த்து நெடியதாக மூச்சுவிட்டு, நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே – புறம் 296/5 நீண்ட நேரம் தாழ்த்து வந்தது நெடுந்தகையாகிய இவனது தேர் நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதே – ஐங் 482/4 ஒருநாளேனும் இடைவழியில் தங்கினால், அது ஊழிக்கால அளவிலும் நெடியது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்