சொல் பொருள்
நெடுங்கை – தாராளக்கை
சொல் பொருள் விளக்கம்
நெடியகை என்பது நீண்டகை என்பதைக் குறியாமல் தாராளமாக அள்ளித் தரும் கை, மிகச் செலவு செய்யும் கை என்னும் பொருளில் வரும்போது வழக்குச் சொல்லாம். “அவளுக்கு நெடுங்கை. ஒரு மாதச் செலவுக்கு இருந்ததை ஒரு நாளையில் தீர்த்து விடுவாள்; “ஆறுநாள் அரைவைச் செலவு அவளுக்கு ஒரு நாளுக்குப்போதாது;” “அவள் கை அவ்வளவு நெடுங்கை; ஒருவர் என்ன இருவருக்குமே நெடுங்கை; குடும்பத்துக்கு எப்படி கட்டுப்படியாகும்” என்பவை வழக்கு மொழிகள், நீட்டல், கைநீட்டல் காண்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்