1. சொல் பொருள்
புகழ்ச்சொல், வஞ்சினம், தன்மேம்பாட்டுரை
2. சொல் பொருள் விளக்கம்
புகழ்ச்சொல்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Eulogy, encomium, praise; vow, boast
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடுமொழி தந்தை அரும் கடி நீவி – அகம் 17/7 மிக்க புகழையுடைய (தன்) தந்தையின் கடுமையான கட்டுக்காவலையும் மீறி, மோகூர் மன்னன் முரசம் கொண்டு நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து – பதி 44/14,15 பகை மன்னனாகிய மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி, அவன் கூறிய வஞ்சினத்தை முறித்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை அடியோடு வீழ்த்தி கள்ளுடை கலத்தர் உள்ளூர் கூறிய நெடுமொழி மறந்த சிறு பேராளர் அஞ்சி நீங்கும்காலை ஏமமாக தாம் முந்துறும் – புறம் 178/8-11 கள்ளையுடைய கலத்தினராய், ஊருக்குள்ளேயிருந்து சொல்லிய வீரம் மேம்பட்ட வார்த்தையைப் போரின்கண் மறந்த சிறிய பேராண்மையுடையவர் போர்க்களத்தில் அஞ்சி ஓடும்போது அவர்க்கு அரணாகத் தான் முந்திவந்து நிற்பான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்