சொல் பொருள்
உடும்பு
சொல் பொருள் விளக்கம்
உடும்பு என்னும் ஊர் உயிரியை நெடுவாலி என்பது குமரி வட்டார வழக்கு. உடும்பின் வால் நீளமும் வலிமையும் கருதிய பெயர் அது. உடு என்பது வளைவு. வாலை எடுத்து உடும்பின் வாயில் தந்து விட்டால் சக்கரம் போலக் கிடக்கும். வாயில் இருந்து வாலையும் எடாது. ஐந்தாறு உடும்புகளைக் கோலில் போட்டு, தோளில் கொண்டு வருவர். உடும்புப் பிடி தன்வாய் அயல்வாய் என்பதும் தெரியாத பிடி என்பது வியப்பாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்