சொல் பொருள்
எண்ணெய், வெண்ணெயை உருக்கி எடுப்பது, தேன்
சொல் பொருள் விளக்கம்
எண்ணெய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
oil, ghee, honey
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் – மலை 105,106 பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய் எண்ணெய் (உள்ளே)கொண்டிருக்க வளர்ந்தன பலவாகக் கிளைத்த ஈரப்பதமான எள் ஆய்மகள் அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி நெய் விலை கட்டி பசும்_பொன் கொள்ளாள் – பெரும் 162-164 இடைமகள், மோரை விற்றதனாலுண்டான உணவால் சுற்றத்தாரைச் சேர்த்து உண்ணப்பண்ணி, நெய்யின் விலைக்குக் கட்டியாகிய பசும்பொன்னையும் வாங்காதவளாய், நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல் – மலை 525 சக்கரம் போன்று ஒழுகும் தேனைத் தன்னிடத்தேகொண்ட தேனடைகளும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்