சொல் பொருள்
திருநாள்களில் மங்களமாக ஆடும் எண்ணெய் முழுக்கு
சொல் பொருள் விளக்கம்
திருநாள்களில் மங்களமாக ஆடும் எண்ணெய் முழுக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Oil-bath taken on festive occasions;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடு நா ஒண் மணி கடி மனை இரட்ட குரை இலை போகிய விரவு மணல் பந்தர் பெரும்பாண் காவல் பூண்டு என ஒருசார் திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப வெறி_உற விரிந்த அறுவை மெல் அணை புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கை சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த – நற் 40/1-9 நீண்ட நாவினைக்கொண்ட ஒள்ளிய மணி, காவலுள்ள மனையில் ஒலிக்க, ஒலிக்கும் தென்னங்கீற்று வேய்ந்து, பரப்பிய மணலைக் கொண்ட பந்தலில், பெரும்பாணர்கள் காவலிருக்க, ஒரு பக்கத்தில் திருந்திய இழை அணிந்த மகளிர் நற்சொல் கேட்டு நிற்க, நறுமணம் கமழ விரிக்கப்பட்ட விரிப்பினைக் கொண்ட மென்மையான அணையில் ஈன்றணிமையின் மணம் மணக்க, செவிலி துயில்விக்க, புதல்வன் தூங்க, வெண்சிறுகடுகை அரைத்து அப்பி, எண்ணெய்பூசிக் குளித்த, ஈருடை தரித்த, பசுநெய் தடவிய மென்மையான உடம்பினையுடைய, சிறப்புப் பொருந்திய தலைவி இரு இமைகளையும் மூடிப் படுத்திருக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்