சொல் பொருள்
நெற்றிப்பணம் – விரும்பாது தரும் காசு
சொல் பொருள் விளக்கம்
இறந்தவர்கள் நெற்றியில் நாலணாக் காசு ஒன்றைப் பசைவைத்துப் பொட்டுப் போல ஒட்டுவர். அதற்கு நெற்றிப் பணம் என்பது பெயர். அப்பணம் இடுகாட்டில் புதைவினை அல்லது எரிவினை புரிவார் எடுத்துக் கொள்ளற்குரியது. இழவுக் குறியாக அமைந்த அப்பணம், கட்டாயமாகத் துன்புறுத்தி வாங்குபவரிடம் உனக்கு நெற்றிப்பணம் அழுதிருக்கிறேன். இனிமேலும் வந்துவிடாதே என்பர். நெற்றிப் பணம் வைக்கப்பட்டவர் மீள்வரோ? அப்படி நீ மீளாதே என வெறுத்துத் தரும் பணம் நெற்றிப்பணம் எனப்பட்டதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்