Skip to content

சொல் பொருள்

எதிர்ப்படுதல், முற்றுவித்தல்

சொல் பொருள் விளக்கம்

எதிர்ப்படுதல், முற்றுவித்தல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

meeting, encountering, making complete

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பைதலம் அல்லேம் பாண பணை தோள்
ஐது அமைந்து அகன்ற அல்குல்
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே – ஐங் 135

வருத்தப்படமாட்டேன் பாணனே! மூங்கில் போன்ற தோள்களையும்,
மென்மையாக அமைந்து அகன்றிருக்கும் அல்குலையும் கொண்ட
நெய்தல் போன்ற அழகிய கண்களையுடையவளை நேரிலே காண நேர்ந்தாலும் –

நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி – அகம் 125/2

முற்றுப்பெறாத இல்வாழ்க்கையை முற்றுவிக்க வேண்டி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *