சொல் பொருள்
முகந்து
சொல் பொருள் விளக்கம்
நொள் என்ற வினையின் இறந்தகால எச்சம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
baling out (as water), measuring out (as grain)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் – நற் 186/1-3 கல்லில் ஊறும் ஊற்றில் சேர்ந்துள்ள நீரைக் குழியிலிருந்து முற்றிலும் அற்றுப்போகுமாறு உறிஞ்சி, கரிய சொரசொரப்பான நீண்ட கையை நீட்டி நீரை முகந்துகொண்டு பெரிய கையையுடைய யானை தன் பிடியை எதிர்கொண்டு ஓடும் விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு மனை புறந்தருதி ஆயின் – அகம் 230/7,8 கூடி விளையாடும் உன் தோழியருடன், வெள்ளிய மணலில் உதிர்த்த புன்னைமரத்தின் நுண்ணிய பொடியினை பொன்னாகக்கொண்டு முகந்து இல்லறம் நடத்துவாயாயின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்