சொல் பொருள்
பற்றின்மை, அக்கறையின்மை, அன்புகலவாத சொல்
சொல் பொருள் விளக்கம்
அன்புகலவாத சொல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
indifference, words of an indifferent person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை 5 அது நீ அறியின் அன்பு-மார் உடையை நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் – நற் 54/5-8 பெரும் தனிமைத்துயரத்தைத் தருகின்றது இந்தச் சிறிய புல்லிய மாலைப்பொழுது; அதனை நீ அறிந்தால் என்மீது அன்புகொள்வாய்; என் மீது ஓர் அக்கறையற்ற இதயம் கொள்ளாமல், எனது குறையை இங்கே இருப்பது போல அவர் உணரும்படி சொல்வாயாக நொதுமல் கழறும் இ அழுங்கல் ஊரே – குறு 12/6 அன்பற்ற மொழிகளைக் கூறும் இந்த ஆரவாரமுடைய ஊர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்