சொல் பொருள்
நொறுக்குதல் – எல்லாமும் தின்றுவிடல், அடித்தல்
சொல் பொருள் விளக்கம்
“பெட்டி நிறையப் பண்டம் வைத்துவிட்டுப் போனேன்; ஒன்றும் காணவில்லை; எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டாயா?” என்பதில் நொறுக்குதல் தின்னுதல் பொருளில் வருதல் காண்க. “நொறுக்குத் தீனி” நொறுங்கத் தின்று நோயகற்று” என்பவற்றில் நொறுக்குதல் தீனியொடு தொடர்பு கொண்டமை அறிக. நொறுக்குதல் என்பது அரைத்தல், பொடியாக்கல் ஆகிய பொருளில் இருந்து தின்னுதல் பொருளுக்கு வந்துள்ளதாம். இனி நொறுக்கிவிடுதல் என்பது அடித்தல், அடித்துச் சிதைத்தல் எனத் தாக்குதல் பொருளிலும் இடம்பெற்றுள்ளதும் அறிக. வீட்டை அடித்து நொறுக்கிவிட்டனர். அவனையும் நொறுக்கி விட்டனர் என்பர்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்