சொல் பொருள்
நொறுநாட்டியம் – ஆகாதன செய்தல்
சொல் பொருள் விளக்கம்
நொறுநாட்டியம், செய்தற்கு அரிய வகையில் மெய்ப்பாடுகளை (உணர்வுகளை)க் காட்டி நடிக்கும் நடிப்பாகும், அது‘நொற நாட்டியம்’ என்றும், ‘நொறு நாட்டியம் பிடித்தவன்’ என்றும் வழங்குகின்றது. செய்தற்கு அரியகலை நுணுக்கங்களைப் பொதுமக்கள் அவ்வளவாக அறிந்துகொள்ள முடிவதில்லை. அவர்களால் நுணுக்கம் உணர முடியாத அது வெட்டித் தனமானதாக அவர்களுக்குத் தோன்றுகின்றது. அதனால் வந்த பொருள் இது. நொறு நாட்டியம் அடாவடிச் செயலாகக்கூட (அக்கிரமமாகக் கூட) அவர்களுக்குத் தோன்றிப் பழிப்புக்கு ஆளாகிறது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்