Skip to content

நோக்காடு போக்காடு

சொல் பொருள்

நோக்காடு – நோய்
போக்காடு – சாவு

சொல் பொருள் விளக்கம்

“ஊரே நோக்காடும் போக்காடுமாகக் கிடக்கிறது” என்று தொற்று நோய் வாட்டும் போதில் சிற்றூர்களில் சொல்வது வழக்காறு. சாக்காடு போல நோக்காடும் போக்காடும் வந்தனவாம். நோ- நோய்; போக்காடு-போதல்; இடுகாடு அல்லது சுடுகாடு கொண்டுபோய்ச் சேர்த்தலைக் குறித்தது. “நின்றான் இருந்தான் கிடந்தான் சென்றான்” என்பது நாலடி. செல்லுதல் இறப்பைக் குறித்தது போல் போக்காடும் குறித்தது. இன்னும் சாவாமல் இருக்கிறானே’ என்னும் ஏக்கத்தில் “போக்கொழிந்தான்” என்பதும் எண்ணத்தக்கது.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *