சொல் பொருள்
நோய் – உடலையும் உள்ளத்தையும் வருத்தும் பிணியும் நோயும்.
நொடி – உடலையும் உள்ளத்தையும் ஒருங்கே வாட்டும் வறுமை.
சொல் பொருள் விளக்கம்
நோ, நோய், நோவு, நோதல், நோக்காடு முதலியவெல்லாம் நோய்வழிச் சொற்களே. ‘நொ’ என்பதும் நோய் என்னும் பொருள் தருவதே. ‘நொடித்துப் போய்விட்டார்’ என்பது வறுமைப் பட்டுவிட்டார்’ என்பதைக் குறிப்பதால் நொடி வறுமைப் பொருள் தருதல் புலப்படும். ஆழ்ந்த பள்ளம் நொடிப் பள்ளம் எனப்படுவதால் வறுமையின் அளவீடு வெளிப்படும். “நோய் நொடியில்லாமல் வாழ்க” என்பதொரு வாழ்த்து வகை.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்