சொல் பொருள்
(பெ) 1. சட்டை, 2. புடவை,
சொல் பொருள் விளக்கம்
1. சட்டை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
coat, jacket, saree
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அடி புதை அரணம் எய்தி படம் புக்கு – பெரும் 69 பாதங்களை மறைக்கின்ற செருப்பைக் கோத்து, சட்டை அணிந்து உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம் புகு மிலேச்சர் உழையர் ஆக – முல் 65,66 உடம்பை ஆட்டிப் பேசும், (வாய்)பேசாத நாவினையுடைய (ஊமைகள்) சட்டை போட்ட மிலேச்சர் அருகில் உள்ளோராக பார்க்க : மிலேச்சர் படம் செய் பந்தர் கல் மிசையதுவே – புறம் 260/28 புடவையால் செய்யப்பட்ட பந்தலின் கீழ் நட்ட கல்லின் மேலது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்