Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தோட்டம், கொல்லை,  2. வீட்டுக்குப் பின்புறம், புழைக்கடை, 3. அடுத்துள்ள இடம், அண்மைப் பகுதி, 4. புறநகர்ப்பகுதி,

சொல் பொருள் விளக்கம்

1. தோட்டம், கொல்லை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

enclosed garden, backyard of a house, adjoining region or locality, outskirts of a city

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எம் படப்பை
கொடும் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை
பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில்
பகல் நீ வரினும் புணர்குவை – அகம் 18/13-16

எம் தோட்டத்தை அடுத்துள்ள
வளைந்த தேனிறால் கட்டப்பட்ட உச்சி உயர்ந்த நெடிய மலையில்
பழங்கள் தொங்குகின்ற செறிவான மரங்கள் உள்ள காந்தள் பூத்துள்ள சோலையில்
பகலில் நீ வந்தாலும் பொருந்தலாம்

இன்னள் ஆயினள் நன்_நுதல் என்று அவர்
துன்ன சென்று செப்புநர் பெறினே
நன்று-மன் வாழி தோழி நம் படப்பை
நீர் வார் பைம் புதல் கலித்த
மாரி பீரத்து அலர் சில கொண்டே – குறு 98

இதுபோல் ஆகிவிட்டாள் நல்ல நெற்றியையுடையவள்” என்று அவர்
கிட்டச் சென்று கூறுவார் கிடைத்தால்,
நல்லது நிச்சயமாக, வாழ்க தோழி! நம் கொல்லைப்புறத்தில்
நீர் ஒழுகி வளர்ந்த புதரின்மேல் செழித்துப் படர்ந்த
கார்காலத்து பீர்க்கின் மலர்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு சென்று

மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை
தண்டலை உழவர் தனி மனை சேப்பின் – பெரும் 354,355

மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
தோப்புகளில் வாழும் உழவரின் தனித்தனியாக அமைந்த மனைகளில் தங்கினால்

கழி சூழ் படப்பை கலி யாணர்
பொழில் புறவின் பூ தண்டலை – பட் 32,33

உப்பங்கழி சூழ்ந்த ஊர்ப்புறங்களையும், மனமகிழ்ச்சி தரும் புதுவருவாயையுடைய
தோப்புக்களை அடுத்து இருக்கும் பூஞ்சோலைகளையும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *