Skip to content

சொல் பொருள்

(வி.எ) 1. மறைந்துபோனால், 2. சாய்ந்தால், 3. நுழைந்தால்,

சொல் பொருள் விளக்கம்

1. மறைந்துபோனால்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

if set, if fell down, if (you) enter 

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் – கலி 78/15

ஞாயிற்றைப் பார்த்து மலர்ந்து, அது மறைந்தபின் கூம்பிப்போகும் மலரைப் போல்

கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின்
வீழ் களிறு மிசையா புலியினும் சிறந்த – அகம் 29/2,3

(படுத்துக்)கிடந்து உயிர் வருந்தினாலும், (தான் தாக்கி) இடப்பக்கம் சாய்ந்தால்
விழுந்த களிறை உண்ணாத புலியைக் காட்டிலும் சிறந்த,

செழும் பல் யாணர் சிறுகுடி படினே
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் – மலை 156,157

வளப்பம் மிக்க பல்வித புதுவருவாயையுடைய சிறிய ஊரில் தங்கினால்,
(அலைச்சலால்)கறுத்துப்போன பெரிய சுற்றத்துடன் பக்குவமாக வேகவைத்த அவ்வுணவை நிறையப் பெறுவீர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *