Skip to content

சொல் பொருள்

(வி.எ) 1. படிந்து, கவிந்து, 2. படிய, குளிக்க,

சொல் பொருள் விளக்கம்

1. படிந்து, கவிந்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

covering with, to bath

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஞாயிறு காணாத மாண் நிழல் படீஇய
மலை முதல் சிறு நெறி மணல் மிக தாஅய்
தண் மழை தலைய ஆகுக நம் நீத்து
சுடர் வாய் நெடு வேல் காளையொடு
மட மா அரிவை போகிய சுரனே – குறு 378

சூரியனையே காணாத மாண்புள்ள நிழல் படிந்து
மலையில் தொடங்கும் சிறிய வழியும், மணல் மிகப் பரவியதாய்
குளிர்ந்த மழை பெய்வதாகவும் ஆகுக; நம்மைப் பிரிந்து
ஒளிவிடும் இலையைக் கொண்ட நெடிய வேலையுடைய தலைவனோடு
மடப்பம் உள்ள மாமைநிறமுள்ள நம் பெண் போகின்ற பாலை நிலத்தில்

மடப்பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய – அகம் 43/4,5

இளைய பெண்யானை
தன் துதிக்கை மறையத்தக்க வெள்ளத்தில் தன் ஆண்யானையுடன் குளித்து விளையாட

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *