சொல் பொருள்
(பெ) நீர்நிலை, ஓடை
பருவம்
ஊடடித்தல்
சொல் பொருள் விளக்கம்
மேலே விடும் பட்டமோ, படிப்பால், பெருமையால் பெறும் பட்டமோ இல்லாத ‘பட்டம்’ இது. பட்டம் என்பது பருவம். ‘பட்டம் தவறின் நட்டம்’ என்பது பழமொழி. நெற்றியில் பட்டம் கட்டுதல் திருமணக் கரணமாக உள்ளது. பயிரின் ஊடே பட்டமடித்தல் (ஊடடித்தல்) உழவர் வழக்கம். இவை பொது வழக்காயவை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
tank, pond, stream
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு – அகம் 107/13-15 இடிந்து விழும் மண்ணின் இடையூற்றினை அஞ்சுவதான ஒரே துறையினையுடைய ஓடையிலுள்ள இன்னாததாகிய ஏற்றம் கொண்ட நெறியில் வழுக்கி விழுந்து மிக்க முடம்பட்டு தன்னந்தனியே ஒழிந்து கிடக்கும் உடல்வலி வாய்ந்த தன்மையினையுடைய பொறுக்கும் பகட்டினை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்