சொல் பொருள்
(பெ) ஊர்சுற்றித்திரிபவன்
பட்டி என்பது ஆடு அடைக்கும் அடைப்பு
நாய்
சொல் பொருள் விளக்கம்
பட்டி=சிற்றூர், மடித்துத் தைத்தல். இவை பொதுப் பொருள். பட்டி என்பதற்கு நாய் என்னும் பொருள் விளவங்கோடு வட்டார வழக்கில் உள்ளது. பட்டி என்பது ஆடு அடைக்கும் அடைப்பு. அது வைக்கப்பட்டு ஆட்டை அடைத்தாலும் மேலும் காவலாக நாயை வைப்பதால் அதுவும் பட்டி எனப்பட்டது. பட்டியைக் காத்தலால் பெற்றபெயர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
unbridled lawless person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட மோதிரம் யாவோ யாம் காண்கு – கலி 84/20,21 விருப்பம்போல் திரிபவனே! அந்தப் பரத்தையரின் கையிலுள்ளதை, என்னை இகழும்படியாக நீ அணிந்திருக்கும் மோதிரங்கள் எவை? நான் பார்க்கிறேன்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்