Skip to content
பண்ணியம்

பண்ணியம் என்றால் தின்பண்டம், வணிகப்பொருள்கள்

1. சொல் பொருள்

(பெ) 1. தின்பண்டம், பலவகைப் பண்டம் 2. வணிகப்பொருள்கள், பலவிதச் சரக்கு, பலசரக்கு, மளிகை

2. சொல் பொருள் விளக்கம்

1. தின்பண்டம்,

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

eatables, snacks, savoury foods, merchandise, groceries, goods of various kinds

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர்
மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர – மது 405,406

பல வேறுபட்ட தின்பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிந்து விற்பவரும்,
மலை போன்ற மாடங்களின் குளிர்ந்த நிழலில் இருக்க 

காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ் நறும் பூவொடு மனை_மனை மறுக – மது 422,423

விருப்பம் மருவிய வடிவினையுடைய நுகர்வோர் விரும்பும் பண்ணியங்களை
கமழ்கின்ற நறிய பூவோடு மனைகள்தோறும் எடுத்துச்செல்ல

பண்ணியம்
பண்ணியம்

பல் வேறு பண்ணிய கடை மெழுக்கு_உறுப்ப – மது 661

பலவாய் வேறுபட்ட பண்டங்களையுடைய கடைகள் மெழுகுதல் செய்யப்பட,

பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும் – பட் 203

(பல)பண்டங்களை ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும்

குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும் – பரி 19/38

குரங்குகளுக்கு உண்பதற்காகப் பலகாரங்கள் கொடுப்போரும்,

பண்ணியம்
பண்ணியம்

பெரும் கடல் நீந்திய மரம் வலி_உறுக்கும்
பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ – பதி 76/4,5

பெரிய கடலில் சென்றுவந்த மரக்கலத்தினைப் பழுதுநீக்கி மீண்டும் வலிமைப்படுத்தும்
பொருள்கள் விற்கும் கடல்வாணிகர் போலப் போரில் ஏற்பட்ட புண்களை ஆற்றி,

மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு
சிறந்த தேஎத்து பண்ணியம் பகர்நரும் – மது 504-506

மலையிடத்தனவும், நிலத்திடத்தனவும், நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய
பல் வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னையும் வாங்கிக்கொண்டு 505
— சிறந்த (அயல்)நாட்டுப் பண்டங்களை விற்போரும்

வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல் – நற் 31/8,9

வேறு பல நாடுகளினின்றும் காற்றுத் தர வந்துசேர்ந்த
பல வகைப்பட்ட பண்டங்கள் வந்து இறங்கும் நிலாவையொத்த மணற்பரப்பிலுள்ள

பணியாரம்
பண்ணியம்

பல் வேறு வகைய நனம் தலை ஈண்டிய
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் – பதி 59/14,15

பல்வேறு வகைப்பட்ட அகன்ற நாடுகளிலிருந்து வந்து குவிந்த,
மலையில் கிடைப்பனவும், கடலில் கிடைப்பனவும் ஆகிய பொருள்களைப் பகிர்ந்தளிக்கும்

மண்ணுவ மணி பொன் மலைய கடல்
பண்ணியம் மாசு அறு பயம் தரு காருக
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார் – பரி 23/23-25

மஞ்சனமாடுதற்குரியவை, மணி, பொன், மலையில் கிடைப்பவை, கடலில்
கிடைக்கும் பொருள்கள், குற்றமற்ற வகையில் பயன்தரக்கூடிய நெசவுப்பொருள்கள் ஆகியவற்றை வணிகம்
செய்யும்
அறவுணர்வுடைய வணிகர்கள் முறையாக அமைந்த தெருக்கள்; ஒருபக்கம்

பண்ணியம்
பண்ணியம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *