சொல் பொருள்
1. (வி) 1. இசை வாசி, 2. ஆயத்தம்செய், 3. அலங்கரி, 4. சமை, 5. வெட்டு, 6. செய்
2. (பெ) பண், இசை,
சொல் பொருள் விளக்கம்
1. இசை வாசி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sing in an instrument, as tune, make ready, adorn, cook, cut, do, melody-type
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி யாழோர் மருதம் பண்ண – மது 657,658 தாள அறுதியை இனிதாக உட்கொண்டு நரம்பை இனிதாகத் தெரித்து, யாழோர் மருதப்பண்ணை இசைக்க பூ நுதல் யானையோடு புனை தேர் பண்ணவும் – புறம் 12/2 பட்டம் பொலிந்த மத்தகத்தையுடைய யானையுடனே அலங்கரிக்கப்பட்ட தேரினை ஏறுதற்கேற்ப அமைக்கவும், வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18 குதிரைகளின் அலங்காரக் கலன்களை யானைகளுக்கு ஒப்பனையாக மாட்டவும் புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும் – மது 533 புகழ்ந்து கூறுமாறு சமைத்த பெரிய இறைச்சிகள் கலந்த சோற்றையும் தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணிய நன்னர் மெல் இணர் புன்னை போல – அகம் 145/12,13 பழைமை பொருந்திய பரிய அடியுடன் துணியும்படி வெட்டிய நன்றாகிய மெல்லிய பூங்கொத்துக்களையுடைய புன்னை போல் கண்ணியர் தாரர் கமழ் நறும் கோதையர் பண்ணிய ஈகை பயன் கொள்வான் ஆடலால் – பரி 16/50,51 தலையில் கண்ணியையும், கழுத்தில் மாலையையும் சூடிய ஆடவரும், மணங்கமழும் மாலையணிந்த மகளிரும், செய்த ஈகையின் பயனைப் பெறுவதற்காக, நீராடுதலால் ஏழ் புணர் சிறப்பின் இன் தொடை சீறியாழ் தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப பண்ணு பெயர்த்து – மது 559,560 (இசை)ஏழும் தன்னிடத்தே கூடின சிறப்பினையுடைய இனிய நரம்பினையுடைய சிறிய யாழை, தாழ்ந்து (அதன்)அயலே (பாடும் தம்)மிடற்றுப் பாடல் ஒப்ப, பண்களை மாறிமாறி இசைத்து(சுருதி கூட்டி),
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்