சொல் பொருள்
(பெ) 1. மகளிர் நீர்விளையாட்டு, 2. இசை, 3. ஒருவகைக் கீரை
சொல் பொருள் விளக்கம்
1. மகளிர் நீர்விளையாட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
girls’ water play, melody-type, a kind of greens
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரை சேர் மருதம் ஏறி பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே – ஐங் 74/3,4 கரையைச் சேர்ந்த மருதமரத்தில் ஏறி, நீருக்குள் பாய்பவளின் குளிர்ந்த நறிய கூந்தல். வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே – பரி 14/4 நிறம் மிக்க வண்டுகள் எழுப்பும் இசை, பண்களைப் போன்றிருந்தனவே! பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப – அகம் 393/9 பண்ணைக்கீரையின் வெள்ளிய பழத்தின் விதையை ஒப்ப
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்