சொல் பொருள்
(பெ.அ) பனைமரத்துடன் தொடர்புகொண்ட
சொல் பொருள் விளக்கம்
பனைமரத்துடன் தொடர்புகொண்ட பனங்கிழங்கு, பனம்பழம், பனங்கள், பனங்கற்கண்டு ஆகிய சொற்களில் வரும் பனம் என்ற சொல் பனைமரத்தைக் குறித்து நிற்கிறது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும் – நற் 38/3 கரிய பனையின் இனிய கள்ளினை உண்போர் மகிழும் இரும் பனம் போந்தை தோடும் – பொரு 143 கரிய பனைமரத்துப் போந்தையின் மாலையினையும் பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் – நற் 90/6 பெரிய கயிறாகத் தொங்கும் கனத்த பனைநாரால் பின்னிப்பிணைக்கப்பட்ட ஊஞ்சலில் இரும் பனம் பசும் குடை பலவுடன் பொதிந்து – குறு 168/2 கரிய பனையின் ஓலையாற்செய்த பசிய குடைக்குள் பலவாக வைத்து மூடி, இரும் பனம் புடையல் – பதி 42/1 கரிய பனந்தோட்டால் ஆன மாலையையும் இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர் – அகம் 277/7 கரிய பனையின் சிறாம்பினைப் போன்ற தடித்த மயிரினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்