பயினி என்பது ஒரு குறிஞ்சி நில மரம், பூ
1. சொல் பொருள்
(பெ) ஒரு குறிஞ்சி நில மரம், பூ
2. சொல் பொருள் விளக்கம்
ஒரு குறிஞ்சி நில மரம்,பூ
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Indian copal tree, Vateria indica, Palm wine
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பயினி வானி பல் இணர் குரவம் – குறி 69 பயின் என்றால் அரக்கு, சாதிலிங்கம் (vermilion) என்றும் கூறுவர். இது விளையும் மரம் பயினி எனப்படும் என்பர். சிதையும் கலத்தை பயினான் திருத்தும் - பரி 10/54 சிறு காரோடன் பயினொடு சேர்த்திய - அகம் 1/5 சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய - அகம் 356/9 பலவும் பயினும் இலை உளர் மாவும் - உஞ்ஞை:48/153 பனிச்சையும் பயினும் பறிய பாய்ந்து - உஞ்ஞை:51/53 திகிரியும் தில்லையும் பயில் பூம் பயினும் முல்லையும் பிடாவும் குல்லையும் கொன்றையும் - இலாவாண:12/17,18 அரக்கும் அதிங்கும் அரும்_பெறல் பயினும் நறையும் நானமும் நாறு இருவேரியும் - இலாவாண:18/46,47 சொல் பயின் மதியான் மிக்க சுகயில் என்று ஒருவன் வந்தான் - சீறா:4873/4 பல் கிழியும் பயினும் துகில் நூலொடு - சிந்தா:1 235/1 பா மருவு கலை எட்டுஎட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே - தேவா-சம்:2259/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்